நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவு

1 mins read
2188c834-89be-4a77-9e1b-178ca91a90c4
46 வயதில் காலமானார் பிஜிலி ரமே‌ஷ். - படம்: இணையம்

சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமாகி பின்னர் நகைச்சுவை நடிகரான பிஜிலி ரமேஷ் காலமானார்.

46 வயதான இவர், 2019ஆம் ஆண்டில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

‘பொன்மகள் வந்தாள்’, ‘ஆடை’, ‘கோமாளி’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 27) சென்னையில் உயிரிழந்தார்.

மதுப் பழக்கத்தினால் ஏற்பட்ட கல்லீரல் பிரச்சினைகளால் அவரின் உடல்நலம் குன்றியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் ஆசை நிறைவேறாமல் காலமானார் பிஜிலி ரமே‌ஷ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்சினிமா