சூர்யதேவராக நாக வம்சியின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படமாக்கப்படுகிறது.
‘#Karthi30’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் முக்கியக் காட்சிகளைத் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நடிகர் கார்த்தியின் புதுப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கார்த்தியின் 31வது படத்தை கணேஷ் பாபு இயக்கவுள்ளார்.
இப்படம் தொடர்பாக இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் Karthi 31வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் கணேஷ் பாபு, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு இளம் இயக்குநராவார். இவர், கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ என்ற உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்பத் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

