தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதியில் குடும்பத்துடன் வழிபாடு செய்த ‘வாத்தியார்’: புதுப்படங்கள் குறித்து தகவல்

1 mins read
42d5250d-04fd-496c-958c-72bb707fc907
கார்த்தி. - படம்: ஊடகம்

அண்மையில் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

தனக்கு மகன் பிறந்ததுமே திருப்பதிக்குச் செல்ல வேண்டும் என நினைத்திருந்தாராம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

இதையடுத்து தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பேசியவர், ‘வா வாத்தியார்’ படம் அடுத்து திரைக்கு வரவிருப்பதாகக் கூறினார்.

அதையடுத்து, ‘கைதி-2’, ‘சர்தார்-2’ என வரிசையாக கார்த்தி நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளன.

நலன் குமாரசாமி இயக்கத்தில் இவர் நடித்து முடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதில் ஏதோ தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.

‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய், கமல், ரஜினி ஆகியோரை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.

அவரின் திரையுலக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது ‘கைதி’ திரைப்படம்தான். பெரும் வரவேற்பைப் பெற்ற அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

ரஜினி உடனான ‘கூலி’ படத்தை முடித்த கையோடு ‘கைதி-2’ படத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ்.

மொத்தத்தில், கார்த்தி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு கொண்டாட்டம்தான்.

குறிப்புச் சொற்கள்