‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி அதன் நாயகன் மணிகண்டனை கோடம்பாக்க உலகில் புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.
புதிதாக ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அவரை நாயகனாக ஒப்பந்தம் செய்ய பெரும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.
குறைந்தபட்ச வெற்றி உறுதி என்பதாலும் அவரது தரப்பில் இருந்து எந்தவிதமான தொல்லையும் வருவதில்லை என்பதாலும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக உருவெடுத்துள்ளார் மணிகண்டன்.
“படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவதாலும் பின்னணிக் குரல் பதிவு வரை அக்கறையுடன் செயல்படுவதும் மணிக்கு நற்பெயர் வாங்கித் தந்துள்ளது. அவரது ஊதியம் கணிசமாகக் கூடியிருக்கிறது,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இப்படிப்பட்ட சூழலில், எப்படியாவது ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் என்ற முடிவோடும் செயலாற்றிக் கொண்டிருக்கிறாராம் மணிகண்டன்.