தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடல் இளைத்த ரோபோ சங்கர்

1 mins read
41b5f160-5c07-4e12-8f1b-79c243abdeca
தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். படம்: தமிழக ஊடகம் -

நடிகர் ரோபோ சங்கர் திடீரென உடல் இளைத்திருப்பது அவரின் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நல்ல உடல்வாகுடன் இருந்த அவர், மெலிந்த உருவத்தில் காணப்படும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

எதனால் அவர் உடல் எடை குறைந்துள்ளது என்பது தெரியவில்லை. ஏதேனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உடல் எடையைக் குறைத்தாரா அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும், ரோபோ சங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவரவில்லை. தற்போது நான்கு புதுப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

விரைவில் தனது உடல் இளைப்பு குறித்து அவர் விளக்கமளிப்பார் எனக் கூறப்படுகிறது.