மூத்த நடிகர் சரத்பாபு காலமானார்

மூத்த நடிகர் சரத்பாபு காலமானார்

1 mins read
18642edb-53f7-4e68-ace7-7cb647342d95
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. படம்: இணையம் -

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.

நடிகர் சரத்பாபு தமிழில் 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்துடன் அவர் நடித்த 'முள்ளும் மலரும்', 'வேலைக்காரன்', 'அண்ணாமலை', 'முத்து' படங்கள் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், ஏப்ரல் 20ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த சரத்பாபுவின் உடல்நிலை திங்கட்கிழமை (மே 22) மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சரத்பாபுவின் இறுதிச்சடங்கு சென்னை தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளிவந்துள்ளது.