நடிகர் செந்திலுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

நடிகர் செந்திலுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
21e3afdf-d6eb-447e-bf47-aede015ef6e4
எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் செந்தில். படம்: இணையம் -

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொவிட்-19 கிருமித்தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் மனைவி திருமதி கலைசெல்வியும் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பதாக பா.ஜனதா கட்சியில் சேர்ந்த நடிகர் செந்தில், அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்கி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

கட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர், இன்னும் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகர் செந்தில் சுரே‌ஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.