நடிகர் ஸ்ரீயுடன் தொடர்புடைய காணொளி ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
2012ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ.
தொடர்ந்து, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ எனப் பல படங்களில் நடித்திருந்தாலும், ஸ்ரீக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக இவரைப்பற்றி எந்தச் செய்தியும் வெளிவராத நிலையில், திடீரென சமூக ஊடகங்களில் ஸ்ரீ குறித்த காணொளி ஒன்று வலம் வருகிறது. அதில் உடல் மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீ.
அவரது கோலத்தைக் கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘மாநகரம்’ படத்தில் நடித்தவர் என்பதால் ஸ்ரீ குறித்து அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமும் பலர் விவரம் கேட்டுள்ளனர்.
அவருக்கு என்ன ஆனது எனக் கேட்டு சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவேளை அடுத்து நடிக்க உள்ள படத்துக்காக ஸ்ரீ இவ்வாறு தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளாரா என்பதும் தெரியவில்லை.

