நடிகர் ‘சூப்பர் குட்’ சுப்ரமணி காலமானார்

1 mins read
6d4a3b57-e64e-40a3-9d36-5c0b3851d500
‘சூப்பர் குட்’ சுப்ரமணி. - படம்: ஊடகம்

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர, நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி காலமானார். அவருக்கு வயது 58.

‘மகாராஜா’, ‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’ எனப் பல தரமான படைப்புகளில் நடித்துள்ளார் சுப்பிரமணி.

தொடக்க காலத்தில் ‘சூப்பர் குட்’ பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி என்றே திரையுலகத்தினர் அழைத்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சூப்பர் குட் சுப்பிரமணி, கடந்த சில மாதங்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

திரையுலகத்தினரும் நண்பர்களும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் உதவி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுப்பிரமணி காலமானார்.

அவருக்கு மனைவி, 11ஆம் வகுப்பு படிக்கும் மகள், 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்