தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடர்ந்து நாயகனாக நடிக்க விருப்பம்: நடிகர் சூரி

2 mins read
7a93955c-fb7a-46df-ac23-e9fdbd2cbe86
நடிகர் சூரி. - படம்: சமூக ஊடகம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை- பாகம் 1’.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமான ‘விடுதலை- பாகம் 2’ தற்போது வெளியாகியுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் , “விடுதலை 2” திரைப்படத்தை பார்க்க வந்த நடிகர் சூரி, செய்தியாளர்களுடன் படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தார்.

“இந்தப் பாகத்தில் ‘வாத்தியார்’ யார் என்பதை விரிவாக விளக்கும் காட்சிகள் உள்ளன. நானும் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன். அடுத்தடுத்த படங்களில் கதையின் நாயகனாகவே எனது பயணம் இருக்கும்,” என்று சூரி கூறினார்.

“மேலும் நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் தயார். ஆனால், அந்தப் படத்தில் யார் கதாநாயகன் என்பது சிவகார்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனக்கு எப்போதும் என் தம்பி சிவகார்த்திகேயன்தான் ஹீரோ,” என்று சூரி தெரிவித்தார்.

சூரி, பி.எஸ்.வினோத்­ராஜ் இயக்­கிய ‘கொட்­டுக்­காளி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரித்தார். ‘கருடன்’ படத்திலும் சூரி நாயகனாக அசத்தினார்.

சூரி, அடுத்து ‘மாமன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் நிலவரம்

விடுதலை 2 திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 7.65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதியில் படம் மேலும் பல கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் திரையுலக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ‘விடுதலை 2’ படத்தின் தயாரிப்பு காணொளி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இரண்டாவது பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், இளவரசு, மஞ்சு வாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்