'சிக்ஸ் பேக்'கில் ரசிகர்களைக் கவரும் நாயகி!

1 mins read
2287ee61-2e52-4b2d-a1f7-b94f2b10eb6f
பயிற்றுவிப்பாளர் சுஜீத் கார்குட்கருடன் நடிகை டாப்சி. படம்: இன்ஸ்டகிராம்/டாப்சி -
multi-img1 of 2

தீவிர உடற்பயிற்சியின்மூலம் எடை குறைத்து, தமது உடல் தோற்றத்தைப் பெரிதும் மாற்றியுள்ளார் நடிகை டாப்சி.

பயிற்றுவிப்பாளர் சுஜீத் கார்குட்கருடன் 'சிக்ஸ் பேக்'கில் காட்சியளிக்கும் படங்களைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

"பல மாதக் கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது. இனிமேல் என்னால் பூரியையும் ரொட்டியையும் சாப்பிட முடியும்," என்று டாப்சி பதிவிட்டுள்ளார்.

நடிகை ஹுமா குரேஷி, இயக்குநர் தாகிரா காஷ்யப் உள்ளிட்ட பலரும் டாப்சியின் இந்த மாற்றத்தைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.

இன்னும் சில இணையவாசிகள், டாப்சியின் இந்த மாறுதலை நடிகர் ஜாக்கி ஷ்ரோஃபின் மகன் டைகர் ஷ்ரோஃபுடன் ஒப்பிட்டுள்ளனர்.

தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி, இந்தியிலும் இப்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது 'ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா' படத்தில் நடித்து வரும் இவர், அடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் 'டங்கி' படம் மூலம் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

'டங்கி' படம் இவ்வாண்டு இறுதியில் திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது.