வடிவேலுக்கு 'டாக்டர்' பட்டம்

வடிவேலுக்கு 'டாக்டர்' பட்டம்

1 mins read
a0975089-50a9-4618-8525-110801e62701
-

நடி­கர் வடி­வே­லுக்கு கௌரவ முனை­வர் (டாக்­டர்) பட்­டம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஓய்­வு­பெற்ற நீதி­பதி வள்­ளி­நா­ய­கம் தலை­மை­யில் செயல்­பட்டு வரும் அனைத்­து­லக ஊழல் தடுப்பு, மனித உரி­மை­கள் ஆணை­யம் வடி­வே­லு­வுக்கு இந்­தப் பட்­டத்தை வழங்கி கௌர­வப்­ப­டுத்தி உள்­ளது.

தனிப்­பட்ட ஒருசில கார­ணங்­களால் திரை­யு­ல­கில் இருந்து சில ஆண்­டு­கள் விலகி இருந்­தார் வடி­வேலு. இப்­போது மீண்டும் நடிக்­கத் தொடங்கி உள்­ளார். அவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான படம் 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்'. இதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்­நி­லை­யில், சிறந்த பொழுது­போக்கு கலை­ஞர் என்ற அடிப்­ப­டை­யில் அவ­ருக்கு கெளரவ முனை­வர் பட்­டம் வழங்­கப்­பட்­டுள்­ளதாக அதை அளித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை­ய­டுத்து ஏரா­ள­மா­னோர் அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.