விஜய்யின் 67வது படத்தின் பெயர்...

விஜய்யின் 67வது படத்தின் பெயர்...

fallback-0

03 Feb 2023 - 9:05 pm

1 mins read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படத்திற்கு 'லியோ' என பெயரிடப்பட்டுள்ளது. 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இத்திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இவர்களின் கூட்டணியில் திரைப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'லியோ' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியீடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.