வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால்.
சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நேற்று இருவரும் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தை கருதி, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர்.

