பேசுபொருளான நடிகரின் பேச்சு

பேசுபொருளான நடிகரின் பேச்சு

1 mins read
ce09062e-bae0-4309-9a29-68b4c4ff52d2
மம்முட்டி. - படம்: கல்ட்

திரையில் முதல்வர் வேடத்தில் தோன்றி நடிப்பது எளிது என்றும் நிஜ வாழ்க்கையில் சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) பணியாற்றுவது மிகவும் கடினம் என்றும் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

அண்மையில் விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரமேஷ் பிஷரோடி, அதே நிகழ்வில் கலந்துகொண்ட மம்முட்டியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.

“மம்முட்டி திரையில் சாதாரண அரசியல்வாதியாக மட்டுமின்றி, இதுவரை மூன்று படங்களில் சக்திவாய்ந்த முதல்வர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்,” எனக் குறிப்பிட்டார் ரமேஷ்.

இதற்கு உடனடியாக மேடையிலேயே நகைச்சுவையுடன் பதிலளித்தார் மமுட்டி.

“திரையில் முதல்வராக நடிப்பது என்பது ஒரு விஷயமே அல்ல. யார் வேண்டுமானாலும் நடித்துவிடலாம். ஆனால் உண்மையான வாழ்க்கையில் மக்களின் பிரதிநிதியாக, ஒரு எம்எல்ஏவாக வாழ்வதுதான் மிகவும் கடினம்,” என்றார் மம்முட்டி.

அண்டை மாநிலமான தமிழகத்தில் முன்னணி நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் களம்கண்டு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், மம்முட்டியின் இந்த எதார்த்தமான பேச்சு, கேரள அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்