இந்தப் பொங்கல் பண்டிகையின்போது தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருப்பதாகச் சொல்கிறார் நடிகை அஞ்சலி. ஏனெனில் அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியீடு கண்டுள்ளன.
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் அஞ்சலி.
இதில் மற்றொரு நாயகியான கியாரா அத்வானியைவிட அஞ்சலியின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
இதேபோல், அஞ்சலியும் வரலட்சுமியும் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியாகி உள்ளது.
இரு படங்களுமே தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியானதுதான் அஞ்சலியின் கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம். ஏனெனில் இவ்விரு மொழிகளில்தான் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அஞ்சலி தமிழில் நடித்து வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் திரைகாண உள்ளது.
இதில் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகச் சொல்கிறார் அஞ்சலி.