இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. அது 2021ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பு ‘அண்ணாத்த’ படத்தில் ஒரு குறிப்பிட்டத்தக்க பாத்திரத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதாவது, படத்தில் தனது கதாபாத்திரம் ஆரம்பத்தில் கூறப்பட்டதுபோல் இல்லை என்றும், குரல் பதிவின் போது படத்தைப் பார்த்துவிட்டு தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
படத்தில் நானும், நடிகை மீனாவும் கதாநாயகிகளாக இருப்போம் என்று முதலில் தெரிவித்தனர். ஆனால் ரஜினிக்கு திடீரென ஒரு நாயகி கிடைத்ததால், எனது கதாபாத்திரம் நகைச்சுவையாக மாறியது. நான் ஒரு கேலிச்சித்திர கதாபாத்திரமாக மாறிப்போனேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். இப்படம் கிட்டத்தட்ட ரூ.240 கோடி வசூல் செய்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.