‘தினசரி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் சிந்தியா லூர்த். இப்படத்தை இவரே தயாரித்து, நடித்திருக்கிறார்.
அண்மையில், நேர்காணல் ஒன்றில் தனது தமிழ்த் திரையுலக வாழ்க்கை குறித்து நடிகை சிந்தியா பேசியுள்ளார். அதில் அவர், திரையுலகம் எப்போதும் புதுமைகளைத் தேடும் கலை என்று குறிப்பிட்டார்.
மேலும், பாடல் ஒன்றைப் பாடுவதற்காகத்தான் நான் படம் எடுத்தேன் என்றார் சிந்தியா. இதன் மூலம் தனது நெடுநாள் கனவு நிறைவேறியதாக அவர் கூறினார்.
“இசை தான் திரையுலக ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழ்த் திரையுலகில் பாடல் மற்றும் கதையை மையமாக வைத்துதான் படம் உருவாகிறது,” என அவர் கூறினார்.

