ஊட்டியில் நடைபெற்ற தனது உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். அது தொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அத்திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்டார் சாய் பல்லவி. அது படுகர் இன மக்கள் அதிகம் உள்ள பகுதி. அதனால் அவர்களது பாரம்பரிய நடனத்தை ஆடி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
நீலநிறச் சேலையில் சாய் பல்லவி காணப்படும் அந்தக் காணொளிப் பதிவைக் கண்ட பலரும், அவரது நடனத்தையும் எளிமையையும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
தற்போது, இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழில் நடிக்க பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

