தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேடி வந்த கதை: வியக்கும் சம்யுக்தா

1 mins read
ee97c7b8-89e7-4e69-a63c-f2df8afd271e
சம்யுக்தா. - படம்: ஊடகம்

தாம் எதிர்பார்த்தது போன்று நாயகியை முன்னிலைப்படுத்தும் கதை ஒன்று தன்னைத்தேடி வந்திருப்பது வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை சம்யுக்தா மேனன்.

தனது புதுப்படத்துக்கான கதையைத் தன்னிடம் விவரிக்க அதன் இயக்குநர் யோகேஷ் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பரபரப்பாக இயங்கி வந்ததால் கதை கேட்கக்கூட நேரமின்றி போனது. யோகேஷ் பலமுறை முயற்சி செய்து இறுதியாக என்னிடம் கதையை விவரித்தபோது உண்மையாகவே ஆச்சரியமடைந்தேன். இப்படிப்பட்ட கதையைத்தான் நான் தேடி வந்தேன். ஆனால் காலம் அந்தக் கதையே என்னைத் தேடி வரும்படி செய்துள்ளது,” என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப்படத்தை ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி தயாரிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் உருவான ‘பீம்லா நாயக்’ படத்தில் ராணாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சம்யுக்தா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்