புற்றுநோயுடன் போராடும் நடிகை உமா சங்கரி

புற்றுநோயுடன் போராடும் நடிகை உமா சங்கரி

1 mins read
f6a853ef-f9e2-4aa4-8066-fb125cf23a10
30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் உமா. - படம்: தினமணி

நடிகை உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உமா சங்கரி. அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்தின் ‘சொக்கத்தங்கம்’ படத்தில் அவரது தங்கையாக நடித்து தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள உமாவுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணமானது. அதன்பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடினமான நாள்களை எப்படிக் கையாள்வது எனக் கற்று வருவதாகச் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வலிமையாக உணரும் நாள்களைக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உமாவின் இந்த உருக்கமான, துணிச்சலான பதிவைக் கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்