நடிகை ஊர்வசியின் மகள் கதாநாயகியாக அறிமுகம்

நடிகை ஊர்வசியின் மகள் கதாநாயகியாக அறிமுகம்

கோப்புப் படம்: செலெபிரிட்டிஸ் செல்ஃபீஸ் / ஃபேஸ்புக்

01 Aug 2026 - 5:35 pm

1 mins read

நடிகை ஊர்வசியின் மகள் தேஜாலட்சுமி ஊர்வசி நாயர் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி. இவரது மகள் தேஜாலட்சுமி ஊர்வசி நாயர், தற்போது கன்னட திரையுலகில் நடிகர் புவன் பொன்னண்ணாவுக்கு ஜோடியாக ‘புல்லி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் நடிகை ஊர்வசி சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத் திரையுலகில் மீண்டும் நடிக்கிறார். மேலும், தாயும் மகளும் இணைந்து ஒரே கன்னடப் படத்தில் முதன்முறையாக திரை பகிர்ந்து கொள்வதும் இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

இதில் ஊர்வசி, புவன் பொன்னண்ணாவின் தாயாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அனுப் ஆன்டனி இயக்கும் ‘புல்லி’, டார்க் காமெடி என்ற படம் முகம் சுளிக்க வைக்கும் அம்சங்களை நகைச்சுவையாகக் காட்டும் படமாகும். தாய்-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படத்தில் அச்சுத் குமார், ஓம் பிரகாஷ் ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகை ஊர்வசி, பற்பல ஆண்டுகளாக நகைச்சுவை, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அசத்தியவராவார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதிரையுலகம்தாய்நடிகர்கன்னடம்