தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சினிமாவிலிருந்து விலகி ரூ.1,200 கோடி சம்பாதித்த நடிகை

1 mins read
8f131d8f-865f-47cf-8bb3-f336fc636fb0
பாலிவுட் திரை உலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் பிரபலமானவர் ஆஷ்கா கோரடியா. - படம்: இந்திய ஊடகம்

திரை உலக நடிகர், நடிகைகள் தொழில் அதிபர்களாகவும் மாறி வருகிறார்கள்.

சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைத் தொழிலில் முதலீடு செய்து பெருஞ்செல்வந்தர்களான நடிகைகள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அவ்வகையில், பாலிவுட் திரை உலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் பிரபலமானவர் ஆஷ்கா கோரடியா.

2000ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கிய ஆஷ்கா 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகைவிட்டு வெளியேற முடிவு செய்தார்.

நடிப்பிலிருந்து விலகி அழகுசாதனப் பொருள்களை விற்கும் நிறுவனத்தை ரூ.50 லட்சம் முதலீட்டில் தொடங்கினார்.

தொடக்கத்தில் இவருடைய பொருள்கள் இணையத்தில் மட்டுமே விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.100 கோடி வருவாயைப் பெற்றுத் தந்தது.

படிப்படியாக ஆஷ்காவின் தொழில் உச்சத்தை அடைந்து, அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.1,200 கோடியை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்