மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்குள்ள அணுசக்தி நகர் தொகுதியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சார்பில் பகத் அகமது என்பவர் போட்டியிடுகிறார். இவர், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரின் கணவராவார்.
இந்நிலையில், தனது கணவருக்கு ஆதரவாக பொது நிதிதிரட்டுத் தளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியை ஸ்வரா பாஸ்கர் எடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும், படித்த, முற்போக்கான இளம் தலைவரான எனது கணவர் பகத் அகமது அணுசக்தி தொகுதியில் வெற்றிபெற தாராளமாக நன்கொடை வழங்கி ஆதரியுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
பகத் அகமது முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். இந்நிலையில், அண்மையில் அவர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.