மற்ற நடிகைகளை மனம் திறந்து பாராட்டுவதில் சமந்தாவுக்கு நிகர் அவர்தான்.
அந்த வகையில் அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தன் மனம் கவர்ந்த சில நாயகிகளை அவர் பட்டியலிட்டார்.
நஸ்ரியா, சாய் பல்லவி, பார்வதி, அனன்யா பாண்டே, ஆலியா பட், கனி, திவ்ய பிரபா ஆகியோரை தமக்கு மிகவும் பிடிக்கும் என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தப் படத்தில் இவர்களுடைய நடிப்பு தன்னைக் கவர்ந்தது என்றும் கூறியுள்ளார்.