தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உண்மையான வசூல்: அஜித் படத் தயாரிப்பாளர்கள் விளக்கம்

1 mins read
ac7694b7-7de2-4240-9246-56c78f95ce01
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித். - படம்: ஊடகம்

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது என ஒரு தரப்பும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மற்றொரு தரப்பும் சமூக ஊடகங்களில் மல்லுகட்டி வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் நவீன், ரவி ஷங்கர் ஆகிய இருவரும் ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

“இந்தப் படம் வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி. அஜித்துக்கும் பெரிய வசூல் வெற்றியாக அமைந்தது.

“அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம், பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும், எந்தவித நஷ்டமும் இல்லாமல் இருந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

“இது எங்களுக்கு ஒரு நல்ல வெற்றிகரமான திட்டமாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு வலுவான நுழைவைப் பெற்றிருக்கிறோம்.

“அஜித்துடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம்,” என்று இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்