ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அஜித்துக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தரும் செய்தி வந்திருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. தனது அடுத்த படத்தையும் ஆதிக்கையே இயக்குமாறு அஜித் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்தியாகிளிட்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதோடு, ‘குட் பேட் அக்லி’யைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் அடுத்த படத்தையும் தயாரிக்கும் என்றும் தகவல் தெரிந்த சிலர் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. அதேவேளை, தகவலை அதிகாரபூர்வமாக அறிவிப்பது மட்டும்தான் மிச்சம் என்றும் கூறப்படுகிறது.
வரும் வாரங்களில் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

