இன்றைய தலைமுறையினரைக் கவரும் விதத்தில் காதல் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகச் சொல்கிறார் அதிதி ஷங்கர்.
நடிகர் அர்ஜுன் தாசும் நடிகை அதிதி சங்கரும் ‘ஒன்ஸ்மோர்’ என்ற புதுப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
‘விருமன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அதிதி, இறுதியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடித்துள்ளார்.
அத்துடன், ‘ஒன்ஸ் மோர்’ படத்திலும் நடித்து வரும் அதிதி சங்கர், இவ்விரண்டு படங்களும் காதலுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக உருவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.