தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகையுடன் நடிகர் சித்தார்த் திருமணம்!

1 mins read
3909f2df-5f43-47c5-b4f3-5435afa4f07f
நடிகை அதிதி ராவ், நடிகர் சித்தார்த்தின் திருமணம் தெலுங்கானாவிலுள்ள ஒரு கோவிலில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின்மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சித்தார்த். இவர் இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கெனவே மேக்னா என்பவரைத் திருமணம் செய்து, பின்னர் பிரிந்துவிட்டார்.

அதேபோல், மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் அதிதி. இவர் 21 வயதிலேயே சத்யதீப் மிஸ்ரா என்பவரை மணந்துகொண்டு, பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘மகாசமுத்திரம்’ எனும் தெலுங்குப் படத்தில் சித்தார்த்தும் அதிதியும் சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் சேர்ந்து வசித்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், 44 வயது சித்தார்த்தும் 37 வயது அதிதியும் அண்மையில் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகசுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, தங்கள் திருமணம் குறித்து இருவரும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்