ஒரு காலத்தில் நடிகர் சித்தார்த்தைக் காதலித்தபோது சமூக ஊடகங்களிலேயே மூழ்கிக் கிடந்தார் நடிகை அதிதி ராவ். இருவரும் காதல் வயப்பட்டதை சமூக ஊடகங்களில்தான் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இருவருக்கும் திருமணமானது. அதன் பின்னர் சினிமாவுக்கும் சமூக ஊடகங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தார் அதிதி ராவ்.
இப்போது சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ள இவரது பேட்டி ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் தமது உணவுமுறை குறித்து விரிவாகப் பேசியுள்ளாராம்.
காலையில் இட்லி சாப்பிடுவதில் தொடங்கி, இரவு மீன் அல்லது கோழி உணவு சாப்பிடுவது வரை அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், ‘இதையெல்லாம் நாங்கள் என்ன செய்யப்போகிறோம்’ என்று கேள்வி கேட்க, வாரந்தோறும் ஒரு நாள் யோகா, ஒரு நாள் நடனம் என ஏழு விதமான உடற்பயிற்சிகளைச் செய்து வருவதாகவும் இந்தத் தகவல் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் அந்த ரசிகருக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அதிதி ராவ்.

