தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவழகன் இயக்கத்தில் தனி நாயகியாக நடிக்கும் அதிதி

1 mins read
0a5fbc30-c44a-4e65-b5f3-aa13e7559504
அதிதி சங்கர். - படம்: ஊடகம்

நயன்தாரா, திரிஷா ஆகியோரின் வரிசையில், நாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார் சங்கர் மகள் அதிதி சங்கர்.

தற்போது ‘ஈரம்’, ‘குற்றம் 23’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அன்பழகன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அறிவழகன். நேர்த்தியான, விறுவிறுப்பான திரைக்கதைக்குப் பெயர் பெற்றவர்.

இந்நிலையில், அதிதியை சந்தித்து இவர் கூறிய கதை அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். உடனே, தயாரிப்புத் தரப்பில் கேட்ட கால்ஷீட்டை உடனடியாக ஒதுக்கியுள்ளார்.

‘விருமன்’, ‘மாவீரன்’, ‘நேசிப்பாயா’, ‘பைரவம்’ என சில படங்களில் மட்டுமே நடித்துள்ள அதிதி, அதற்குள் தனிநாயகியாக நடிக்க விரும்புவது குறித்து சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளனர்.

அதிதி இதுவரை நடித்த எந்தப் படமும் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்