ஆர்யாவுடன் மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அண்மைய நேர்காணல் ஒன்றில் அஜித்துடனான பைக் பயண நினைவுகளை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.
அஜித்துடன் 14 நாள்கள் லடாக்கில் பைக் பயணம் சென்றது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பயணத்தின் போது மஞ்சு வாரியருக்கு பைக் ஓட்டத் தெரிந்தாலும், ஓட்டுநர் உரிமம் இல்லையாம். அதன் பிறகுதான் அவர் முறையாக உரிமம் வாங்கியுள்ளார்.
பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால், நம்மை நாமே எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த முக்கிய ஆலோசனைகளை அஜித் வழங்கினார். அந்தப் பாடங்கள் இப்போதும் தனக்குப் பயனுள்ளதாக இருப்பதாக மஞ்சு வாரியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாதி சினிமா, பாதி கார் பந்தயம்
ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் எப்படித் தனது நேரத்தை அரசியலுக்கும் சினிமாவிற்கும் சரிசமமாகப் பிரித்துள்ளாரோ, அதே பாணியை இப்போது அஜித்தும் தனது கார் பந்தய ஆர்வத்திற்காகக் கையில் எடுத்துள்ளார்.
கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், இனிவரும் காலங்களில் ஒரு மாதத்தின் 15 நாள்களைச் சினிமாவிற்கும் மீதமுள்ள 15 நாள்களைக் கார் பந்தயத்திற்கும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளார்.

