3 படங்களுக்குப் பிறகு எதிர்காலம் குறித்து யோசிப்பேன்: பிரதீப்

1 mins read
97f38677-37f5-4c97-9f38-c38bfd87b769
‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் - படம்: சமூக ஊடகம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் (படம்) நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’.

அந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வரும் 21ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

“ ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு என்ன மாதிரியான கதையைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் ‘டிராகன்’ வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் 2-வது முறையாக இணைந்துள்ளேன்.

“’ஓ மை கடவுளே’ எனும் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர் என் 10 ஆண்டுகால நண்பர். இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துதான் பழகுகிறோம். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்று பிரதீப் ரங்கநாதன் கூறினார்.

“இப்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, நடிப்பா, இயக்கமா? என்பதை முடிவு செய்வேன்’‘ என்றார் பிரதீப் ரங்கநாதன்.

குறிப்புச் சொற்கள்
இயக்குநர்நடிகர்திரைச்செய்தி