சுந்தர்.சியுடன் வைகைப் புயல் வடிவேலு இணைந்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக, வடிவேலு நடித்த ‘கைப்புள்ள’, ‘நாய் சேகர்’, ‘வீரபாகு’, ‘வழக்கறிஞர் வெடிமுத்து’ போன்ற கதாபாத்திரங்கள் இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.
அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் ஐந்து விதமான வேடங்களில் நடித்திருக்கும் வடிவேலு, அவற்றில் ஒரு பெண் கதாபாத்திரத்திலும் கலக்கி இருக்கிறாராம்.
கடந்த சில ஆண்டுகளில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான படங்கள் மிகவும் குறைவு. நிறைய நகைச்சுவை நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் இருந்தபோதிலும் இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே கசப்பான உண்மை.

