‘அகரம் அறக்கட்டளை’ மூலம் இதுவரை 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவி உள்ளார் சூர்யா.
‘அகரம் அறக்கட்டளை’ 20ஆம் ஆண்டிலும் விதைத் திட்டம் 15ஆம் ஆண்டிலும் அடியெடுத்து வைக்கின்றன.
இதைக் கொண்டாடும் விதமாக, இன்று (ஆகஸ்ட் 3) சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்று நடைபெற இருக்கிறது. அதில் ‘அகரம்’ மூலம் படித்து, பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் உள்ள மாணவர்களில் இருந்து இப்போது பயன்பெற்று வரும் பல்வேறு மாணவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில் தாம் நடித்த ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த பத்து கோடி ரூபாயை ‘அகரம் அறக்கட்டளை’க்கு நன்கொடையாக அளித்துள்ளார் சூர்யா.