தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா.
குறிப்பாக, முழுநீளக் காதல், நகைச்சுவையுடன் கூடிய காதல் கதைகளே தனது முதன்மைத் தேர்வாக இருக்கும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலீலாவுக்குத் தற்போது 24 வயதாகிறது. எனவே, இந்த வயதுக்கேற்ற மனநிலையைத்தான் தம்மிடம் எதிர்பார்க்க இயலும் என்கிறார் அவர்.
“தற்போது பெண்களை முன்னிலைப்படுத்தும் படைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுபோன்ற வலிமையான, ஊக்கமளிக்கும் கதைகளைப் பார்க்கும்போது அதுபோன்ற பாத்திரங்களில் நடிக்கும் ஆசை எனக்கும் உள்ளது.
“அதேசமயம் என் வயதுக்கேற்ற பாத்திரங்கள் அமையும்போது அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறேன்,” என்கிறார் ஸ்ரீலீலா.
அண்மைக் காலமாக இவர் கவர்ச்சியான பாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக சிலர் விமர்சித்திருந்தனர். அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீலீலா.

