தமிழ்த் திரையுலகில் மிளிர்ந்த சில நட்சத்திர ஜோடிகளை, ‘ரீல் ஜோடி’ என்பதைக் கடந்து பார்வையாளர்கள் கொண்டாடினர். அத்தகைய நட்சத்திர ஜோடி களைப் பற்றிய ஓர் பார்வை.
பழம்பெரும் கலைஞர்கள் நாடக நாயகன் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கும் கொடுமுடி கோகிலம் எனப் புகழப்பட்ட கே.பி.சுந்தராம்பாளுக்கும் இடையேயான ஜோடிப் பொருத்தம் பெரிதும் விரும்பப்பட்டது.
அதிலும் ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் வேடனாக கிட்டப்பாவும் மலைவாழ் கன்னி, வள்ளி யாக கே.பி.சுந்தராம்பாளும் மேடையில் ஒருவரையொருவர் மிஞ்ச, போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள், பாடுவார்கள். ஒருசமயம் இலங்கையில் தங்கி நாடகம் நடித்தபோது, கிட்டப்பாவை பலமுறை வள்ளி சுந்தராம்பாள் வீழ்த்திவிட்டார். இலங்கை மேடையில் பூத்த இந்த ஜோடியின் காதல், தமிழகம் திரும்பியதும் மேலும் பூத்து, திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் அந்தக்கால சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார் ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர். 1944ஆம் ஆண்டு ‘ஹரிதாஸ்’ படத்தில் ‘மன்மதலீலை வென்றார் உண்டோ’ என பாகவதர் பாடிய பாடல் இன்றளவும் ஹிட். அதுமட்டுமா, அந்தப் பாடலுக்கு ஆடிய டி.ஆர்.ராஜகுமாரி, பாகவதரை நோக்கி ‘பறக்கும் முத்தம்’ தருவார். அந்த கிளுகிளுப்பில் ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள். பாகவதர், ராஜ குமாரி ‘உடல்மொழி’ சினிமா வரலாற்றில் மறைக்க முடியாதது
நடிகை விஜயகுமாரி, நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ஜோடிப் பொருத்தமும் பரவலாக ரசிகர் களால் சிலாகிக்கப்பட்டது. ‘பூம்புகார்’ படத்தில் இருவருமே நடிப்பில் அசத்தி இருப்பார்கள். திரையில் ஜொலித்த இவர்களது காதல், நிஜ வாழ்க்கையிலும் ஜொலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் இவர்களது காதல் இருவருக்குமே வலி மிகுந்ததாக அமைந்தது என்பது சோகம்.
எம்ஜிஆர், தனது இரு படங்களான ‘நாடோடி மன்னன்’, ‘திருடாதே’வில், ஒரே நேரத்தில், சரோஜா தேவியை அறிமுகப் படுத்தினார். எம்ஜிஆர், சரோஜாதேவி ஜோடி மொத்தம் 26 படங் களில் நடித்தது. இதனால் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, பொதுவான திரை ரசிகர்களுக்கும் இந்த ஜோடி ரசவாதம் ரசிக்கத்தக்கதாக அமைந்தது.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் ‘சக்கரக்கட்டி ராஜாத்தி’ என இந்த ஜோடியின் ஈடுபாடு இயல்பானதாக இருக்கும்.
நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த ‘படகோட்டி’ யில், ‘தொட்டால் பூ மலரும்’ என இவர்களது ஜோடிப் பொருத்தம் மலர்ந்து மணக்கும். மேல்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த ‘அன்பே வா’ படத்தில் ‘ராஜாவின் பார்வை’ எனத் தாங்களும் லயித்து, ரசிகர்களையும் லயிக்க வைத்திருப்பார்கள்.
தொடர்புடைய செய்திகள்
எம்ஜிஆருடன் அதிகமான படங்களில் நடித்த நாயகி என்கிற சரோஜா தேவியின் சாத னையை விஞ்சியவர் ஜெயலலிதா. இருவரும் 28 படங்களில் ஜோடியாக நடித்திருந்தார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியானபோது, எம்ஜிஆருக்குப் பொருத்தமான ஜோடியாக ஜெயலலிதா இருக்கிறார் எனப் பரவலாகப் பேச்சு இருந்தது.
சிவாஜி என்றாலே, துணைப் பெயர் போல ‘பத்மினி’ என்கிற பெயரும் வந்துவிடும். இருவரும் இணைந்து 39 படங்கள் வரை நடித்திருக்கிறார்கள். நடிகை பத்மினியை ‘பப்பி’, ‘பப்பிம்மா’ என்றுதான் சிவாஜி அழைப்பார்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இருவரும் காதலின் ஆழத்தை மௌனத்தாலும் கண் பார்வையாலும் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார்கள். அந்த ‘நலந்தானா?’ பாடலை மறக்கத்தான் முடியுமா?
‘வியட்நாம் வீடு’ படத்தில் முதிர்ந்த தம்பதியாக, இருவரும் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடலில் உயிர் உருக நடித்திருப்பார்கள். அதிலும், ‘என் தேவையை யார் அறிவார்?’ என சிவாஜி பாடும்போது, ‘இத்தனை ஆண்டுகளாக அவருடைய நிழலாக இருக்கிறோம்... என் தேவையை யார் அறிவார்? என்று கேட்கிறாரே’ என்பது போல் பரி தவிப்புடன் கண்ணில் நீர்வழிய சிவாஜியைப் பார்ப்பார் பத்மினி.
‘உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என சிவாஜி பாடியதும், அத்தனை சோகத்திலும் பத்மினி பெருமிதமாய் விம்மலுடன் ஒரு பெருமூச்சு விடுவாரே... அப்பப்பப்பா...!
சிவாஜியும் பத்மினியும் திரு மணம் செய்து கொள்வார்கள் என்றுகூட சினிமா பட்சிகள் கூறின. ஆனால் அது நடக்கவில்லை. கேரள மக்கள் சிவாஜியை ‘எங்க நாட்டு மருமகன்’ என்றுதான் சொல்வார்கள். ஒரு முறை சிவாஜி, தன் மனைவி கமலா அம்மாவுடன் தேக்கடிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
படகில் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது, கரையில் இருந்த கேரள மக்கள் ‘எந்தா சார்... நீங்கள் கேரளாவை மறந்து போயி’ என்றனர். உடனே சிவாஜி, தன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடி... ‘எண்ட பப்பி பறந்துபோயி.... ஞான் கேரளாவ மறந்துபோயி’ என்றார் சிவாஜி. இவருக்கு மிகவும் பொருத்தமான ‘ரீல்’ ஜோடியாக மற்றொரு நடிகை தேவிகா.
நடிகர் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் ‘மனம் போல மாங்கல்யம்’ படத்தில், காதல் காட்சி களில் உண்மையான காதலர் களைப்போல் மிக இயல்பாக நடித்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் குடும்பத்தார் எதிர்ப்பை மீறி, ஏற் கெனவே இருவரைத் திருமணம் செய்துகொண்ட ஜெமினிக்கு மூன்றாம் மனைவியானார் சாவித்திரி.
திரையில் ஜோடி சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் நிஜ வாழ்க்கையில் இணைய முடி யாமல் பிரிந்ததும் திருமண வாழ்க்கை நீடிக்காமல் சிலர் பிரிந்துபோனதும் மற்றொரு சோகம்,” என்கிறார்கள் திரை யுலக விவரப் புள்ளிகள்.
- பார்வை சுழலும்