வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘சூர்யா 45’ படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழில் ‘குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களின் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ‘வாடிவாசல்’ படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.