ஐஸ்வர்யா ரஜினி அடுத்து நடிகர் சித்தார்த்தை வைத்து படம் இயக்கவிருந்தார்.
ஆனால், இதற்கான அவரின் கதையைத் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தாமே புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி, அந்தக் கதையைப் படமாக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
‘3’, ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ என ஐஸ்வர்யா ஏற்கெனவே இயக்கிய மூன்று படங்களும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தப் படத்துக்காக அவர் கூடுதலாக மெனக்கெடுகிறாராம்.