இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
‘3’, ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இறுதியாக, இவர் இயக்கிய ‘லால் சலாம்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட முக்கிய இந்திய மொழிகளிலும் ‘பான் இந்தியா’ திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கதைக்களம், இதில் நடிக்கப்போகும் முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

