நடிகரானார் அஜித்தின் அண்ணன்; ஹாலிவுட் படத்தில் நடிக்கத் தயாராகிறார்

நடிகரானார் அஜித்தின் அண்ணன்; ஹாலிவுட் படத்தில் நடிக்கத் தயாராகிறார்

1 mins read
6a85c065-ac28-4081-bf4c-3a68229c2f50
அனில், அஜித். - படங்கள்: டைம்ஸ் நௌ

நடிகர் அஜித்தின் அண்ணன் அனில் குமார் நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் நடிப்பது தமிழ்ப் படமன்று; ஹாலிவுட் படம்.

தற்போது ‘ஜோடி365.காம்’ என்ற திருமணத் தகவல் மையத்தை நடத்தி வருகிறார் அனில்.

இந்நிலையில், ‘கோகோ அண்ட் நட்’ என்ற ஆங்கிலப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இதுகுறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“இது அனைத்துலக ரசிகர்களுக்காகக் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகும் திரைப்படம்.

“கதைப்படி, இதில் உண்மை வாழ்க்கையைப்போல் திருமண ஏற்பாடுகளைச் செய்யும் வெற்றிகரமான முகவராக நடிக்கிறேன். இதுதான் எனது தொழில் என்பதால் நடிப்பதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை,” என்று அனில் கூறியுள்ளார்.

பொதுவாக நடிகர் அஜித் குடும்பத்தார் குறித்து எந்தத் தகவலும் கசியாது. அவர் மனைவி ஷாலினி நடிகை என்பதால் அவ்வப்போது அவர் மீது மட்டும் ஊடக வெளிச்சம் பாயும்.

இந்நிலையில், அவரது அண்ணன் திரைப்படங்களில் நடிப்பது குறித்துத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போவதாகக் கூறியபோது, ‘அப்படியா’ என்று வியப்படைந்த அஜித், சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், கதை, தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாராம். இதனால் ஹாலிவுட் படத்தில் நடிக்க உற்சாகத்துடன் தயாராகி வருகிறார் அனில் குமார்.

குறிப்புச் சொற்கள்