தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றது அஜித் அணி

1 mins read
a43885e9-6ebf-4f2c-9a67-0cbe82b41732
அஜித். - படம்: ஊடகம்

பத்மபூஷண் விருது கிடைத்தது, அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாவது என உற்சாகத்தில் உள்ளார் அஜித்.

அடுத்து, இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரது அணி மீண்டும் மூன்றாவது இடத்தைப் பெற்று சாதித்துள்ளது. கடந்த சில நாள்களாக இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித், அண்மைய பேட்டியில் இதுகுறித்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“துபாய் 24 மணி நேர கார் பந்தயத்துக்குப் பிறகு களமிறங்கி வெற்றி கண்டது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ச்சியான போட்டிகள் பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன.

“மிகவும் ரசித்து, ஆர்வமுடன் இந்தப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். ஓர் அணியின் வீரராக, உரிமையாளராக இருப்பது பெரிய கௌரவம்.

“எல்லாம் சரியாக அமைந்தால் மேலும் சில ஆண்டுகளுக்கு இந்தத் துறையில் ஈடுபட விரும்புகிறேன்,” எனக் கூறியுள்ளார் அஜித்.

இவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

கார் போட்டிகளில் பங்கேற்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

இத்தாலி போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடியுடன் சென்றார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்