அஜித் கார் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பது தெரிந்த தகவல்தான். அதனால்தான் படங்களில் நடிக்க ஒதுக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, காரோட்டும் பயிற்சி, ரேஸ் என்று உலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ரூ.18 கோடிக்கு புது கார் வாங்கியுள்ளார். பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் அந்தக் கார் தற்போது துபாயில் இருக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டுவரமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்தக் காரை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம், குறைந்த எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாம்.
ஏற்கெனவே துபாயில் அசையும், அசையா சொத்துகளை வாங்குவதில் முனைப்பு காட்டி வருகிறார் அஜித்.
அங்கு அவருக்கு ஏற்கெனவே இரண்டு வீடுகள் உள்ள நிலையில், அண்மையில் மூன்றாவது வீடும் வாங்கியுள்ளதாகத் தகவல்.