ஒருபுறம் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், மறுபுறம் தனது கார் பந்தயம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கெனவே கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள அஜித், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற பெயரில் கார் பந்தயத்தில் களமிறங்குகிறார்.
துபாயில் நடைபெற உள்ள 24H கார் பந்தயத்தில் அஜித் அவரது அணியினருடன் கலந்து கொள்ள உள்ளார். இதற்காகத் தனது விலையுயர்ந்த ‘போர்ஷே’ காரை கார் பந்தயத்தில் போட்டியிடுவதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து வருகிறார்.
அந்த காரில் இந்திய தேசியக் கொடி, தமிழக விளையாட்டுத் துறையின் முத்திரை, ‘அஜித் குமார் ரேஸிங்’ உள்ளிட்ட குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தனக்காகத் தயாராகி உள்ள காருடன் அஜித் பந்தயக் களத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.