மாதவன் வீட்டில் மங்காத்தா நாயகன்

மாதவன் வீட்டில் மங்காத்தா நாயகன்

1 mins read
ade5a39d-279b-48d1-8d78-fa2e4397b699
நடிகர் மாதவன் குடும்பத்தினருடன் அஜித் குடும்பத்தினர். - படம்: ஊடகம்

மாதவனின் துபாய் வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். இது தொடர்பாக மாதவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டார்.

மாதவன், அஜித்குமார் ஆகிய இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் இருவருக்கு இடையிலும் அவர்களின் குடும்பத்தாரிடமும் நல்ல நட்புறவு உள்ளது. அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மாதவன் ஆகியோர் இணைந்து ‘அலைபாயுதே’ படத்தில் நடித்துள்ளனர்.

அஜித்தின் குடும்ப நிகழ்வுகளில் மாதவன் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது, மாதவனின் குடும்ப நிகழ்வுகளில் அஜித் தனது குடும்பத்துடன் கலந்து கொள்வது என இரண்டு குடும்பங்களுமே மிகவும் நெருக்கமான குடும்பங்களாக உள்ளன. இந்நிலையில்தான் மாதவன் தனது வீட்டில் ஏற்பாடு செய்த குடும்ப நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொண்டார்.

தற்போது அஜித்குமார் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகின்றார். மேலும், ஐரோப்பிய கார் பந்தயமான ‘ஜிடி3’ கார் பந்தையத்திலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தீவிரமான பயிற்சியிலும் தனது அணியினருடன் அஜித் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பயிற்சியை அவர் அபுதாபியில் மேற்கொண்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்