சின்னத்திரை மூலம் பிரபலமாகி, பின்னர் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ஷர்மிளா தாபா.
அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தற்போது கடப்பிதழ் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
கடப்பிதழ் விண்ணப்பத்தில் இவர் அளித்த முகவரி தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நேப்பாளத்தைச் சேர்ந்த ஷர்மிளா, நடன உதவி இயக்குநர் ரகு என்பவரைத் திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
மேலும், தனது இந்தியக் கடப்பிதழுக்கான விண்ணப்பத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை அண்ணாநகரில் வசிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது கடப்பிதழைப் புதுப்பிக்கும்போது வேறொரு முகவரியைக் குறிப்பிட்டதால், உள்துறை அமைச்சு இவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.