அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் நடத்த உள்ளனர்.
ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் அங்கு தங்கியிருந்து சண்டை, பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்களாம்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தில், அஜித்துடன் மீண்டும் நாயகியாக இணைந்துள்ளார் திரிஷா.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.250 கோடி செலவில் இப்படத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.