நடிகர் அஜித் (படம்) தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது.
தான் எழுதியுள்ள கதை குறித்து அஜித்திடம் சில வரிகளில் சுருக்கமாக பிரசாந்த் நீல் விவரிக்க, அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம்.
பிரசாந்த் நீல் கதை சொன்ன பிறகு மேலும் பல இயக்குநர்கள் அவரை அணுகி வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய கதைகளாகக் கூறினராம்.
ஆனால், அஜித்துக்கு வேறு எந்தத் கதையும் மனநிறைவு தரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பிரசாந்த் நீல்தான் அவருடைய தேர்வு என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அஜித்தைப் பொறுத்தவரை, தாம் எதிர்பார்த்தபடி திரைக்கதை அமையாவிட்டால் அதில் நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பார்.
இந்தக் காரணத்தால்தான் ‘விடாமுயற்சி’ படம் வெளியீடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டதாகச் செய்தி வெளியானது.

