‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, தனது புதுப்படம் குறித்து அஜித் ஏதாவது அறிவிப்பார் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
பத்ம பூஷண் விருதை வாங்கிக்கொண்டு, உடனே கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.
ஒருவேளை கடந்த வாரமே சத்தமின்றி பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திரும்பி வந்த பிறகுதான் அடுத்த பட அறிவிப்பை வெளியிடலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல்.
சிவா, மகிழ் திருமேனி, ஆதிக் என மூன்று பேரிடமும் அவர் கதை கேட்டுள்ளதாகத் தகவல்.
அஜித், பல தோல்விகளைக் கடந்து சாதித்துக் காட்டியவர் என்பதால், அவர் மீண்டும் மகிழ் திருமேனியுடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

