விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் போட்டியாக களமிறக்கப்படுகிறது. இதனால் சிவா மீது ஏற்கெனவே விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அஜித் படமும் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தையும் பொங்கல் வேளையில் மறுவெளியீடு செய்ய அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு சோர்வாக இருந்த அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேசமயம் ‘ஜனநாயக’னுக்குப் போட்டியாக அஜித் படம் மறுவெளியீடு காண்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இதனிடையே, அஜித்தின் ‘அமர்க்களம்’ படத்தை பிப்ரவரி மாதம் மறுவெளியீடு செய்ய உள்ளனர்.

